நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி!
ஊரக பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர காவல் எல்லை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
முடிதிருத்தும் நிலையங்களில் தினந்தோறும் ஐந்து முறை கிருமிநாசினி அளிக்கவேண்டும் என்றும் கையுறை அணிந்து முடி திருத்த வேண்டும் என்றும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.






