வேட்டியில் ஸ்கர்ட், சட்டை வடிவமைத்து நடிகை பூர்ணிமா அறிமுகம்!

ஆண்கள் அணியும் வேஷ்டியில் பெண்கள் அணியும் ஸ்கர்ட் மற்றும் சட்டையை மலையாள நடிகை பூர்ணிமா புதிதாக வடிவமைத்து உள்ளார். கொரொனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் நடிகைகள் பலரும் விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

 

அடிப்படையில் ஆடை வடிவமைப்பு நிபுணரான பூர்ணிமா ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் ஆண்கள் அணியும் வேஷ்டியை கொண்டு பெண்களுக்கான உடையை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார்.

 

இந்த புதிய உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூர்ணிமாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. வித்தியாசமான இந்த உடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரசிகர்கள் பலரும் விற்பனைக்கு கிடைக்குமா என நடிகை பூர்ணிமா விடம் கேட்டு வருகிறார்கள்.


Leave a Reply