--- --:--:-- --

சித்தியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்! தட்டிக்கேட்ட அத்தை கொலை!

12.2

கணவனை இழந்து வாழும் தனது சித்தியுடன் வாழ்ந்து வந்த அண்ணன் மகனை தட்டிக்கேட்ட அத்தையை கத்தியால் குத்திக் கொலை செய்தவர் தப்பியோடியுள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்தது என்ன? மனிதர்கள் சமூக விலங்கு என்பதை அவ்வப்போது நடக்கும் குற்றங்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

 

முறை தவறிய உறவுகளால் ஏற்படும் மோதல்களால் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னையில் நடந்துள்ள சம்பவத்தில் தவறு யார் மீது? சென்னையை அடுத்த புழல் வினாயகபுரம் பரிமல நகரைச் சேர்ந்த சரவணனின் மனைவி குணசுந்தரி. குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேஷ் சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் முதல் பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

 

குணசுந்தரியின் தம்பி லோகு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி தீபா தனியாக வசித்து வந்தார். குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசனுக்கும் அவரது மனைவி அருள் செல்விக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அவரது அத்தை உறவுகொண்ட குணசுந்தரி உடன் பெயிண்டரான கணேஷ் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

தனிமையில் வாழ்ந்து வந்த தீபாவுக்கு உதவி செய்ய சென்ற கணேஷனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 5 மாதங்களாக இருவரும் தனிமை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். தனது தம்பி மனைவியுடன் அண்ணன் மகன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருப்பது குறித்து அறிந்த குணசுந்தரி கணேசனை பலமுறை கண்டித்துள்ளார்.

 

ஆனால் அவர்கள் குணசுந்தரியை உதாசீனம் செய்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குணசுந்தரி வெள்ளியன்று கணேசன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. சமையலறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் அத்தையை குணசுந்தரியின் மார்பிலும் முதுகிலும் கழுத்திலும் குத்தியுள்ளார் கணேசன்.

 

குணசுந்தரி உயிரிழந்ததை பார்த்த கணேசன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். குணசுந்தரி உடன் சென்று கால் டாக்சி ஓட்டுநர் உமாசங்கர் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தகவல் அளித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து கொளத்தூர் ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கணேஷ், குணசுந்தரிக்கு இடையில் கள்ள காதல் ஏற்பட்டு பின்னர் உறவுக்கார பெண்ணான தீபாவிடம் காதல் வயப்பட்டது கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேலூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குணசுந்தரி வெல்டிங் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கதிர் என்பவரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon