தங்கையின் கள்ளக்காதலால் தங்கை மற்றும் காதலனை கொடூரமாக வெட்டி கொலை செய்த அண்ணன்!

மதுரை அருகே தங்கையையும், அவரது காதலரையும் ஒரு கட்சி பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார். தங்கையையும் அவர் கொலை செய்ய காரணம் என்ன? தங்கை புதிய வாழ்க்கை அமைத்துக் கொண்டதை விரும்பாத அண்ணன் தங்கையையும் அவரது காதலனையும் உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளான்.

 

உறவுகளுக்குள் மோதல் வெடித்தது எப்படி? மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவை சேர்ந்தவர் 26 வயது ஆய்யம்மாள். அதே பகுதியை சேர்ந்த விமல் என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வந்தாள் ஆய்யம்மாள்.

 

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அன்புநாதன் என்ற 28 வயது இளைஞருடன் ஆய்யம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டு. நாளடைவில் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர். இருவரும் பைக்கில் அடிக்கடிசுற்றித் திரிந்த நிலையில் கிராமத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த விமர்சனம் ஆய்யம்மாளின் சகோதரரும் மேலும் திமுக ஒன்றிய கவுன்சிலருமான தமிழ்மாறன் காதுகளில் விழுந்து உள்ளது. தங்கையின் புதிய வாழ்க்கையை அவமானமாக கருதிய தமிழ்மாறன் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஆய்யம்மாளும், அன்புநாதன் பைக்கில் வெளியே சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

 

இதை நோட்டமிட்ட தமிழ்மாறன் தனது உறவினர்களான ராஜா என்ற அய்யனார் மற்றும் சதீஷ் ஆகியோருடன் நல்லான் பெற்றான் கண்மாய் சாலைக்கு சென்றுள்ளான். அங்கு இருவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்து இருவரையும் அரிவாளால் கழுத்து, கை என சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

 

ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்த காதல் ஜோடி இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த தமிழ்மாறன், ராஜா மற்றும் சதீஷ் ஆகியோரை பிடித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தங்கை அமைத்துக் கொண்ட புதிய வாழ்க்கை குறித்து ஊரார் விமர்சனம் செய்ததை தட்டிக் கேட்காமல் அண்ணன் எடுத்த மோசமான முடிவு மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply