--- --:--:-- --

திருவாடானையில் திமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்!

21

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை மகாலிங்கம் கோவில் திடலில் கொரனோ வைரஸ் தொற்று பரவலை அடுத்து ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவலை பரவலால் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

 

எனவே உணவிற்காக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, திமுக மாவட்ட இளைஞம் அணி சார்பில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர்கள், ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி பை சமூக இடைவெளி விட்டு நின்று முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்பான முறையில் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் முகம்மது முக்தார், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், மாவட்ட இளைஞரணி அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள். ஏழை மக்களுக்கும் . ஆட்டோ ஓட்டுநர்கள், ஆகியோர்களுக்கு வழங்கிய அரிசியை அனைவரும் பெற்று பயனடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon