கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம்!
கொரொனா பரவலின் வேகம் உச்சத்தில் இருக்கும் தற்போதைய தருணத்தில் அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். கொரொனா தொற்று குறித்தும் ஊரடங்கின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்நாட்டு ஊடகங்களுக்கும் பிரதமரின் பெயரில் அறிக்கை வெளியானது.
அதற்கு சரியான சிகிச்சை அல்லது தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாக கூறியுள்ள போரிஸ் ஜான்சன் உண்மையில் இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் ஒருபோதும் தடுப்புசி கண்டுபிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.






