சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா!

சென்னை கண்ணகி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 

இதில் மேலும் எட்டு பேருக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணகி நகரில் மொத்தம் 14 நபர்களுக்கு மற்றும் பரவியுள்ளது. இதேபோல புளியந்தோப்பு பகுதிக்கு இறுதி சடங்கிற்கு சென்ற நான்கு நபர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கும் செம்மஞ்சேரி, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


Leave a Reply