தாராவியில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா!

மும்பையில் மிகவும் அதிக அளவில் கொரொனா நோய் தொற்று பரவுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கும் தாராவியில் மட்டும் 1000 எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்தியாவில் 1000 பேர் பாதித்துள்ள முதல் குடிசை பகுதியாகவும் இது இடம் பெற்றுள்ளது.

 

தாராவியில் மட்டும் 31 பேர் உயிரிழந்துவிட்டனர். சமூக இடைவெளிக்கே இடமில்லாத மிகவும் நெருக்கமான குடிசை பகுதிகளில் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். செவ்வாய்க்கிழமை 66 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 962 இருந்துள்ளது.

 

அடுத்த 48 மணி நேரத்தில் ஆயிரத்தை கடந்து விடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே புதிதாக பொறுப்பேற்ற மும்பை மாநகராட்சி ஆணையர் ஜா கல் மருத்துவ குழுவினருடன் தாராவி பகுதியில் நிலைமையின் தீவிரத்தை ஆய்வுசெய்து ஆலோசனை நடத்தினார்.


Leave a Reply