--- --:--:-- --

திருவாடானை அருகே முன் விரோதத்தால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

1

திருவாடானை ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே முத்துவேல் என்பவரின் மகன் சுந்தரலிங்கம் முயற்சி மகன் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

 

இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜா தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சுந்தரலிங்கத்தை வெட்டியதில் அவருக்கு கையிலும், தலையிலும் பட்டுகாயம் ஏற்பட்டது .

ரத்தம் சொட்டச்சொட்ட சுந்தரலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு,திருவாடனை காவிரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சுந்தரலிங்கம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

இதுகுறித்து திருவாடனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon