கொரோனா பிரச்னையில் புயலாம்.. மழையாம்…! கவலையில் மக்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

 

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது. கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் வெயிலின் தாக்கம், அதனால் ஏற்படும் உஷ்ணம் மக்களை வாட்டுகிறது.

 

இந் நிலையில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் இந்தியாவில் பரவலாக கோடைக்காலமாக அறியப்படுகிறது. இந்த கோடைக்காலங்களில் வெப்ப சலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

 

ஆகையால் அந்தமான் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனால் பெரிய மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீபகற்பத்தில் சில பகுதிகளில் மிதமான அளவில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply