வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை!
Friends and relatives of Kushwaha family who work as migrant workers walk along a road to return to their villages, during a 21-day nationwide lockdown to limit the spreading of coronavirus, in New Delhi, India, March 26, 2020. To match Special Report HEALTH-CORONAVIRUS/INDIA-MIGRANTS. REUTERS/Danish Siddiqui
தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் ,ஆன்மீக யாத்திரிகர்கள் பணி நிமித்தமாக சென்றவர்கள் உட்பட பல ஆயிரம் பேர் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளனர். விமானம், ரயில், பேருந்து, டாக்ஸி உள்பட அனைத்து போக்குவரத்து முடங்கியதால் அவர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. பலர் பல நூறு கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊருக்கு சென்றனர்.
புலம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து பல்வேறு மாநில அரசுகள் ரயில் போக்குவரத்தை தொடங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். தொழிலாளர்கள் உள்ளிட்டோரை அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசு உத்தரவிட்டால் சில மணி நேரத்தில் ரயில் சேவையை தொடங்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பல்வேறு மாநில முதலமைச்சர்களும், தலைமை செயலக அதிகாரிகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள பிற மாநிலத்தவரை திருப்பி அனுப்பி வைப்பதற்காக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்கள் தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தனி குழுக்களை நியமித்து உள்ளன. மே 3 ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு நிறுத்தப்பட்டதும் புலம்பெயர்ந்தவர்கள் ஊர் திரும்ப நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






