அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பணிகளுக்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியரை சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் சென்னையில் நிவாரண முகாம்கள் அமைப்பதற்கான இடங்களை கண்டறியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை மே 2-ஆம் தேதிக்குள் கையகப்படுத்துமாறு கூறியுள்ளார். ஆணையரின் கடிதத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்வதோடு கட்டடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் பாதித்தவர்களை பள்ளி கட்டடங்களில் தங்க வைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

சென்னையில் 98 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரொனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply