கொரோனாவால் 142 குழந்தைகள் பாதிப்பு!
கொரொனா வைரஸ் தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அண்மை நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 13 குழந்தைகளுக்கு தொற்று உறுதி ஆனதால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது .
இவர்களில் சிறுவர்கள் 67 பேர் மற்றும் சிறுமிகள் 75 பேர் சென்னையில் மட்டும் அல்லாது அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் கொரொனாவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படுவது கணிசமாக உயர்ந்து வருவதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம் 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களை பொருத்தவரை ஆண்கள் 1,300 பேர் பெண்களில் 626 பேர் என மொத்தம் ஆயிரத்து 929 பேர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதியவர்கள் 175 பேர் , மூதாட்டிகள் 7 7 பேர் என மொத்தம் 252 பேர் வைரஸ் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






