மூதாட்டியின் காதில் வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி! உயிருடன் வெளியேற்றப்பட்டது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் மூதாட்டியின் காதில் நுழைந்து வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி உயிருடன் வெளியேற்றப்பட்டு உள்ளது. சிசுவான் மாவட்டத்திலுள்ள மினியான் மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி கடுமையான காது வலியால் தவிப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அவரது காதை பரிசோதித்தபோது உள்ளே பட்டு பந்துபோல் உருண்டை தெரிந்துள்ளது. இதையடுத்து ஓட்டோஸ்கோப்பி மூலம் பரிசோதித்து சிலந்தி ஒன்று உயிருடன் உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிலந்தியை அகற்றியுள்ளனர்.


Leave a Reply