இராமேஸ்வரம் கடல் பகுதியில் வீசிய சூறாவளி காற்று ! படகுகள் சேதம் !!

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமேஸ்வரத்தில் இன்று அதிகாலையில் வீசிய கடும் சூறைக்காற்றில் சிக்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.இதனை அறிந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மு.மணிகண்டன் உடனடியாக இராமேஸ்வரம் சென்றார்.

 

மேலும் இராமேஸ்வரத்தில் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு, படகின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.அதனையடுத்து சேதமடைந்த படகுகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் தெரிவித்தார்.மேலும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் சேதமடைந்த படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.


Leave a Reply