ரோமியோ சலூன் கடை வைத்திருந்தவருக்கு கொரொனா தொற்று உறுதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் விதிகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்து இருந்தவனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

அவருடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் தனது சலூன் கடையை திறந்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் முடிதிருத்தம் செய்து கொண்ட 30 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மீதமுள்ளவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததற்காக சலூன் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


Leave a Reply