ஆர் எஸ் மங்கலம் ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது!

Publish by: ஆனந்த் --- Photo :


ஆர் எஸ் மங்கலம் ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தி மு க சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினார் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியத்தின் தி மு க சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர் எஸ் மங்கலம், ஒன்றிய திமுக அணியின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் தன்னலம் கருதாமல் துப்புரவு பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை சமூக இடைவெளி விட்டு நின்று முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்பான முறையில் வழங்கினார்கள். இதனை ஏராளமானோர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.


Leave a Reply