பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் காலமானார்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மும்பை மருத்துவமனையில் பெருங்குடல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 53 ஆகும். ஸ்லம்டாக் மில்லியனர். இன்பர்னோ, லைஃப் ஆஃப் பை ஆகிய ஹாலிவுட் படங்களிலும், பிகு உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளவர், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

 

இந்த நிலையில் பெருங்குடல் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இந்தி நடிகர் இர்பான் கானுக்கு சொதஃபா, பாபுன் ஆயன் என்ற மனைவியும் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இர்பான் கானின் தாயார் காலமானது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply