பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? அனைத்து மாநில முதலமைச்சர்களின் முடிவு என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநில முதலமைச்சர்கள், பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு பொது முகத்தை நீட்டிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி 4வது முறையாக அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது மேகாலயா, மிசோரம், புதுச்சேரி,உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத், ஹரியானா ஆகிய ஒன்பது மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மட்டும் கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப் பட்டதாக தெரிகிறது. பிற மாநில முதலமைச்சர்கள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பிரதமர் அலுவலகத்திடம் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டன.

 

பிரதமருடன் பேச வாய்ப்பு கிடைத்த 9 முதல்வர்களில் நான்கு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பொது முடக்கம் காரணமாகவே நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் இந்த நேரத்தில்தளர்த்தும் முடிவை மேற்கொண்டால் இத்தனை நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும் என கூறியுள்ளார்.

 

நோய் தொற்று அதிகம் உள்ள மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மத்திய பிரதேச மாநில முதல்வர்களும் பொதுமக்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என விரும்புவதாக தெரியவந்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதை தொடர்ந்து மாநில முதல்வர்கள் கூறிய கருத்துக்கள், எழுதி அனுப்பிய கடிதங்கள் ஆகியவற்றை பரிசீலித்து அதன் அடிப்படையில் பிரதமர் முடிவை வெளியிடுவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான முதல்வர்கள், பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருப்பதால் மூன்றாவது முறையாக சில வாரங்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.


Leave a Reply