சீர்காழியில் சுற்றித்திரிந்த அரியவகை பூனை…!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்புபடம்


நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த அரியவகை பூனையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். செங்கமேடு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அரியவகை பூனை ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த பூனையின் நடமாட்டத்தை இரண்டு நாட்களாக கண்காணித்து வந்த நிலையில் பின்னர் கூண்டு வைத்து பிடித்தனர். இதனையடுத்து அதனை கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் உள்ள காப்புக்காட்டில் கொண்டு பத்திரமாக விட்டனர். இந்த அரிய வகை பூனை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு சென்று இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

இதேபோல் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கிகுளம் பகுதியில் கரடி நடமாட்டத்தால் கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 

விரைந்து வந்த வனத்துறையினர் கரடியை பிடிக்க முற்பட்டனர். அப்போது கரடி இருவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த விவசாயி செல்வராஜ் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply