போதைக்காக சானிடைசரை குடித்த மாணவர் உயிரிழப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கர்நாடகாவில் போதைக்காக சானிடைசர் எனப்படும் கைகழுவும் திரவத்தையும் இருமல் மருந்தையும் கலந்து குடித்து இளைஞர் உயிரிழந்தார். உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சுதீப் என்பவர் கர்நாடக பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்தார். பிறகு ஊரடங்கு காரணமாக அங்கு மது கடைகள் மூடப்பட்டுள்ளன.

 

இதனால் மது அருந்த முடியாமல் தவித்த சுதீப் கை கழுவப் பயன்படும் சானிடைசரையும் இருமல் மருந்தையும் கலந்து குடித்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் தங்கியிருந்த வீட்டிலேயே இறந்து போனார். சில நாட்களாக அவர் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதால் வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply