நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட தவறான பழக்கம்! அரிவாள் வெட்டில் முடிந்தது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டை அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. நண்பர்களுக்குள் கொலைவெறி தாக்குதல் நடக்க காரணம் என்ன?

 

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட முந்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 34 வயதான ஆனந்த். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன ஆனந்தன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் உதயா, சுரேந்தர் இவர்கள் மூவரும் சிறுவயதிலிருந்து ஆனந்தனுக்கு நண்பர்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

 

அப்படி சென்று வருகையில் ஆனந்தனுக்கும், சக நண்பனின் அக்காவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தனுக்கு திருமணமாகியும் தனது நண்பரின் அக்காவிடம் அத்துமீறி பழகியதாக தெரியவந்துள்ளது. தனது அக்காவிற்கும் நண்பர் ஆனந்திற்குமான விவகாரம் உதயாவுக்கு தெரியவர தனது அக்காவை கண்டித்துள்ளார் உதயா. மேலும் ஆனந்தனிடம் இதுபற்றி பேசிய உதயா. நண்பன் உடனான பழக்கத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

ஊரடங்கு யாரைத்தான் விட்டு வைத்தது. ஊரடங்கு காரணமாக ஆனந்தனிடம் வரம்பு மீறிய காதல் எல்லை தாண்டி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உதயா கடந்த வெள்ளிக்கிழமை ஆனந்தனின் வீட்டிற்கு தனது மற்றொரு நண்பரான சுரேந்தர் உடன் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே ஆனந்தனை அழைத்த உதயா அவரை கண்டித்ததால் நண்பர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது.

 

ஒரு கட்டத்தில் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதயா ஆனந்தனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு வலது கை மணிக்கட்டு மற்றும் இடது கை மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டு விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆனந்தன் கூச்சலிட அங்கிருந்து தப்பியோடினர்.

 

மனைவியின் கண் முன்னே ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் சரிய அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஆனந்தின் மனைவி ஜெனிபர் அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயா, சுரேந்தர் ஆகியோரை கைது செய்தனர்.இவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply