--- --:--:-- --

ஊரடங்கில் மாற்றமா? 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் எடப்பாடி திடீர் ஆலோசனை…!

8

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதலமைச்சவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

கடந்த மாதம் 22ம் தேதி முதல் முறையாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அடுத்த 2 நாட்களில் நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை அறிவித்தார். அந்த ஊரடங்கு ஏப்ரல் 14க்குப் பிறகு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமர் மோடி 4வது முறையாக மாநில முதலமைச்சர்களுடான ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார். அதில் 4 மாநில முதலமைச்சகள் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தினர்.

 

இந்நிலையில், மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

 

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த கூட்டம் கருதப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon