டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நாளை மறுநாள் நடக்கிறது. முந்தைய உத்தரவின் நிலை, காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு குறித்தும் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு, நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறித்தும் ஆலோசனை நடக்கவுள்ளது.