102 ஆம்புலன்சில் நெருக்கியடுத்து ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு!
தென்காசியில் இருந்து நெல்லைக்கு 102 ஆம்புலன்ஸ் ஒன்றில் நோயாளிகளை நெருக்கியடித்து ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரொனா குறித்த முன்னெச்சரிக்கை ஏதுமில்லாமல் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் என 40 பேரையும் ஒரே ஆம்புலன்சில் நெருக்கியடித்து ஏற்றி சென்று அதே நெரிசல் உடன் நெல்லை திரும்புவதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் டயாலிசிஸ் நோயாளிகளை தென்காசியிலிருந்து நெல்லையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தாய் சேய் நல உறுதியான 102 ஆம்புலன்ஸ் தான் தற்போது டவுன் பஸ்கள் போல இயக்கப்பட்டு வருகிறது.

டயாலிசிஸ் செய்வதற்காக 6 மணிக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு 11 மணிக்கு சிகிச்சை முடிந்தாலும் மீண்டும் மாலை 6 மணிக்குதான் அழைத்து செல்ல 102 ஆம்புலன்ஸ் வருவதாகவும் முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்த நிலையில் இந்த வாகனத்தில் அடைத்துக் கொண்டு செல்லப்படுவதால் தற்போது மூன்று முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் நாள் முழுவதும் பட்டினியாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதில் பயணிக்கும் கர்ப்பிணி மற்றும் அவரது குடும்பத்தாரிடமும் தனியாக பணம் வசூல் செய்வதாகவும் புகார் அனுப்பப்படுகிறது. நோயாளிகள் மட்டும் இல்லாமல் உறவினர்களையும் பணம் வாங்கிக்கொண்டு அழைத்து வரும் இந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தினமும் பயணிக்கும் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகிறது.
சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் தென்காசியிலிருந்து நோயாளிகள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்கினால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் இருந்தும், நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.






