கொரோனாவில் இந்தியா நிலை என்ன..? எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்து உள்ளது.

 

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 872 ஆக இருந்தது. 6,185 பேர் குணமடைந்தும், 20,835 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆக உயர்வடைந்திருந்தது.

 

இந் நிலையில், சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 934 ஆக உயர்ந்துள்ளது. 6,869 பேர் குணமடைந்தும், 21,632 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

 

அதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892ல் இருந்து 29,435 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் அதிக அளவாக மகாராஷ்டிராவில் தான் 8,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

தமிழகத்தில் 1,937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 1,101 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 1,020 ஆக இருந்தது.

 

கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட மாநிலமாக கோவா உள்ளது. அதே போன்று அருணாசல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.


Leave a Reply