தேக்கம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஐடிசி நிறுவனம் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இந்தியாவும் தப்பவில்லை.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை – 52. மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மேலும் 47 பேர் உட்பட பாதிப்பு எண்ணிக்கை 570 ; தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 81 ஆகும்.

 

இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.தமிழகத்தில் பரவி வரும் வைரசால் சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர்உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.தடை உத்தரவால் பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே சென்று விட்டு வீட்டினுள் முடங்கியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியினை வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது.தொழிலதிபர்கள்,தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதியினை அளித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் பலரும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வீடு,வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

 

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேவனாபுரத்தில் செயல்பட்டு வரும் ஐடிசி லிமிடெட் எனும் தனியார் நிறுவனம் தேக்கம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் ,தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டும்,முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.

 

பொதுமக்களுக்கான நிவாரணப்பொருட்களை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் முன்னிலையில் ஐடிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வெங்கட்ட ராவ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நித்யா நந்தகுமார்,துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply