கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வந்து சென்ற வீட்டில் இருந்த 7 பேருக்கு கொரோனா முடிவுகள் விரைவில் வர உள்ளது — சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் தகவல் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்து வந்தது.நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை141 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கோவையில் நேற்று வரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 112 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை,போத்தனூர் உள்ளிட்ட 10 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ,வெளிநபர்கள் உள்ளே நுழையவோ தடை செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வ.உ.சி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கி பின் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனால் அப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கியிருக்க கூடும் என்ற அச்சத்தில் வ.உ.சி நகரில் உள்ள 5 தெருக்கள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ,வெளிநபர்கள் உள்ளே நுழையவோ தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண்மணி வந்து சென்ற உறவினர் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தும்,காய்கறி,மளிகை,மருந்து,கேஸ் ஏஜென்சி கடைகளின் தொடர்பு எண்கள் அடங்கிய நோட்டீஸ்களும் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

 

தேவைப்படுவோர் நோட்டீஸ்களில் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டால் கடைக்காரர்களே டோர் டெலிவரி செய்யும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.பேரூராட்சி சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியினை இன்று சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா,சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா கூறுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வந்து சென்ற வீட்டில் இருந்த 7 பேருக்கு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சோதனை முடிவுகள் விரைவில் வர உள்ளது.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வந்து சென்ற வ.உ.சி நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ,வெளிநபர்கள் உள்ளே நுழையவோ தடை செய்யப்பட்டுள்ளது எனவும்,ஒலிபெருக்கி மூலம் வ.உ.சி நகர் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து அறிவித்து வருவதாகவும்,அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் கேஸ், காய்கறி,மளிகை,மருந்து கடைகளின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அவர்களுக்கு கடைக்காரர்களே வீட்டிற்கு நேரடியாக டெலிவரி செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும்,அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இருமல்,தும்மல்,காய்ச்சல் ஏதும் உள்ளதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும்,கிருமி நாசினி அப்பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும்,அப்பகுதியில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறை மற்றும் தூய்மைப்பணியாளர்கள் பணியில் இருக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply