குயின் வெப் சீரிசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க அவசியமில்லை!

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளுக்கு தடை கோரும் ஜெ.தீபா வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

 

கங்கனா ரனாவத் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கும் தலைவி படத்துக்கும், கவுதம் வாசு தேவன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தமிழ் தொடருக்கும் தடை விதிக்கக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

வழக்கின் மேல்முறையீட்டில் தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் எந்த உரிமையும் இல்லாமல் உள்நோக்கத்துடன் தீபா தாக்கல் செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பையா, பொண்ணைய பணம் வரும் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கவுதம் மேனனின் குயின் இணையதளத்தில் வெளியாகி விட்டதால். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க தீபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

அப்போது கொரொனா பொது முடக்கத்தால் சினிமா படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தலைவி படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


எமதர்மா ராஜன் வேடமிட்டு கொரோனா நாட்டுப்புற பாடல்கள் பாடி விழிப்புணர்வு சிவகங்கை போலீசார் ஏற்பாடு!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் கொரரோன விழிப்புணர்வு சிவகங்கை நகர் காவல் நிலையம் சார்பில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேடை நடன சங்கம் சார்பில் நடைபெற்றன. எம தர்மராஜ வேடமனிந்து இரு சக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டன.

பின்னர் கொரரோன விழிப்புணர்வு பாடல்களை நாட்டுப்புற பாட்டுகள் மாதிரி பாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். அரசு ஊழியர்களை ஏற்றி வந்த அரசு பஸ்களை போலீசார்  மாஸ்க் அணிந்து உள்ளர்களா என சோதனை செய்தனர் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கை அரண்மனை வாசலில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றன.


தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது . இதனை உறுதி செய்யும் வகையில் , 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார் .

 

சமூக இடைவெளியுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது .


கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வந்து சென்ற வீட்டில் இருந்த 7 பேருக்கு கொரோனா முடிவுகள் விரைவில் வர உள்ளது — சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் தகவல் !!!

கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்து வந்தது.நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை141 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கோவையில் நேற்று வரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 112 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை,போத்தனூர் உள்ளிட்ட 10 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ,வெளிநபர்கள் உள்ளே நுழையவோ தடை செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வ.உ.சி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கி பின் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனால் அப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கியிருக்க கூடும் என்ற அச்சத்தில் வ.உ.சி நகரில் உள்ள 5 தெருக்கள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ,வெளிநபர்கள் உள்ளே நுழையவோ தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண்மணி வந்து சென்ற உறவினர் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தும்,காய்கறி,மளிகை,மருந்து,கேஸ் ஏஜென்சி கடைகளின் தொடர்பு எண்கள் அடங்கிய நோட்டீஸ்களும் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

 

தேவைப்படுவோர் நோட்டீஸ்களில் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டால் கடைக்காரர்களே டோர் டெலிவரி செய்யும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.பேரூராட்சி சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியினை இன்று சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா,சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா கூறுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வந்து சென்ற வீட்டில் இருந்த 7 பேருக்கு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சோதனை முடிவுகள் விரைவில் வர உள்ளது.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வந்து சென்ற வ.உ.சி நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ,வெளிநபர்கள் உள்ளே நுழையவோ தடை செய்யப்பட்டுள்ளது எனவும்,ஒலிபெருக்கி மூலம் வ.உ.சி நகர் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து அறிவித்து வருவதாகவும்,அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் கேஸ், காய்கறி,மளிகை,மருந்து கடைகளின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அவர்களுக்கு கடைக்காரர்களே வீட்டிற்கு நேரடியாக டெலிவரி செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும்,அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இருமல்,தும்மல்,காய்ச்சல் ஏதும் உள்ளதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும்,கிருமி நாசினி அப்பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும்,அப்பகுதியில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறை மற்றும் தூய்மைப்பணியாளர்கள் பணியில் இருக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ” திடீர் ” இடமாற்றம்.சுகாதாரத்துறை செயலர் அதிரடி நடவடிக்கை !!!

கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகனை திடீர் பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இதில் தினந்தோறும் உள்நோயாளிகளாகவும்,வெளிநோயாளிகளாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவர்கள்,தூய்மைப்பணியாளர் என அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஓய்வின்றி இரவு,பகலாக பணியாற்றி வருகின்றனர்.இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்தது.

மேலும்,இவர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்ட சமையல்காரர்கள் கொரோனா அச்சத்தால் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால் மருத்துவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 

இவ்விஷயத்தை பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.பீலா ராஜேஷிடம் புகார் தெரிவித்த நிலையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் சென்னைக்கு ” திடீர் ” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக கோவை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் காளிதாஸுக்கு முதல்வர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்த நிலையில் மருத்துவக்கல்லூரி முதல்வரின் ” திடீர் ” இடமாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் இந்த அதிரடி நடவடிக்கை சுகாதாரத்துறையில் பணியாற்றுவோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்…


சீமானை உடனடியாக கைது செய்க…! – வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது வாய்ஸ் ஆப் தமிழ்நாடு நிறுவனத்தின் நிறுவன தலைவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜசேகரன் தலைமையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் சீமானை உடனடியாக கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீமான் பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்