--- --:--:-- --

நடிகர் விஜய் கொரொனா நிவாரண நிதி : ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி

10

நடிகர் விஜய் கொரொனா நிவாரண நிதிக்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாயும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

கொரொனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.

 

ஹாட்ஸ் பாட்டுக்கள் எனப்படும் நோய் பரவும் மையங்களை கண்டறிதல், அவற்றை அதிக அளவில் கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களை அக்கறையுடன் கவனித்தல், அதிகரிக்கும் மருத்துவ செலவுகளை சமாளிக்க இவற்றுடன் டிஜிட்டல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரோக்ய சேது போன்ற செயலிகளை அறிமுகம் செய்தல் என்று இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

நாடுதழுவிய ஊரடங்கு மூலம் வைரஸ் பரவுவது கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதாக பில்கேட்ஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon