தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 104 டிகிரி வெப்பம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

 

இந்த நிலையில் மதுரை, நெல்லை, சேலம், வேலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Leave a Reply