செல்போன் ரீசார்ஜ், மின்விசிறி விற்பனை! தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கல்விக்கான புத்தகங்கள் விற்பனை, மின்விசிறிகள், பிரிபெய்டு செல்போன் ரீசார்ஜ் போன்றவற்றிற்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்ட கோரிக்கைகளை ஏற்ற பல்வேறு வழக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

அதன்படி ரொட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், பால் பதனிடும் ஆலைகள், நகர்ப்புறங்களில் செயல்படும் மாவு மில்கள் போன்றவை இயங்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகள், மின்விசிறிகளை விற்பனை செய்யும் கடைகள் போன்றவையும் திறக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவ்வாறு மூத்த குடிமக்களை கவனித்துக்கொள்வோர், ப்ரீபெய்டு செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைகள் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளனர். விதைகள் மற்றும் தோட்ட பயிர்கள் ஏற்றுமதிக்கான வசதிகள் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலத்திற்குள் விதைப்பதற்கான பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லவும் அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

வன அலுவலகங்கள், வனத்துறை தோட்டங்கள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள் போன்றவற்றில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற வசதியாக கடலோடும் தொழிலாளர்கள் கப்பல்களில் ஏறவும் கப்பல்களை விட்டு இறங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்பற்றவேண்டிய விரிவான நடைமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


Leave a Reply