--- --:--:-- --

ஓணம் பண்டிகை: நாளை ரயில்வே முன்பதிவு மையங்கள் அரை நாள் மட்டுமே செயல்படும்

9

ணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 26) தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை பணிநேர முறையைப் பின்பற்றிச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதன்படி, நாளை காலை 08:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே (ஒரு ஷிஃப்ட்) முன்பதிவு மையங்கள் இயங்கும் எனத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று பயணச்சீட்டு முன்பதிவு செய்யத் திட்டமிடும் பயணிகள் இந்த நேர மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon