தெருநாய்களை கருணை கொலை செய்யலாம்; கேரள அரசு அனுமதி
குணப்படுத்த முடியாத, கடுமையாக காயமடைந்த, வெறி நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறிகள் உள்ள தெருநாய்களை கருணை கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
தகுதிபெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த மருந்தை நரம்பு வழியாக செலுத்தியே கருணைக் கொலை செய்ய வேண்டும் என்றும் விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




