கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி அரசு உத்தரவு
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் காவேரி வனப்பகுதியில் பீட்டர், அந்தோணிசாமி மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (CID) மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
வனத்துறையினர் ரோந்து பணியின் போது தங்களைத் தாக்கியதால் தங்களது பாதுகாப்பிற்காகச் சுட்டதாகத் தெரிவித்த நிலையில், கொல்லப்பட்ட 3 பேரையும் பிடித்து வைத்து மிக அருகில் இருந்து போலி என்கவுண்டர் செய்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் இரு மாநில எல்லையோரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





