--- --:--:-- --

டெட் தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

5

மிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித்தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்படுள்ள நிலையில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் உள்ள ஆசிரியர்கள் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. 15 முதல் 20 வருடங்கள் வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித்தேர்வு எழுதச் சொல்லுவது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்கறிது.

 

 

எனவே 2010 ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டெட்) தேர்வில் இருந்து விலக்கு அளிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon