சானிடைசர் தயாரிக்க அரிசியா? எதிர்ப்பு தெரிவிக்கும் ராகுல் காந்தி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சானிடைசர் தயாரிக்க அரிசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்‌பி ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சானிடைசர் தயாரிக்க பயன்படும் எத்தனாலை உருவாக்க இந்திய உணவு கழகத்தில் இருக்கும் கூடுதல் அரிசியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

 

இதுகுறித்து விமர்சித்துள்ள ராகுல்காந்தி ஏழைகள் பசியால் இறந்து கொண்டிருக்கும் போது அரசு பணக்காரர்களின் கைகளை சுத்தப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக தெரிவித்திருந்தார். ஏழைகளுக்கு உணவாக பயன்படும் அரிசியை கொண்டு மத்திய அரசு சானிடைசர் தயாரிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

 

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூடுதல் அரிசியை பயன்படுத்தி தான் எத்தனால் தயாரிக்கப்படுவதாக கூறினார். ஏழைகளுக்கும் சனிடைசர் மற்றும் மாஸ்க்குகள் கிடைக்கக்கூடாது என ராகுல் காந்தி விரும்புகிறாரா என்று அவர் வினவினார்.

 

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மே 3ஆம் தேதி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றிட ஐடி நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னை மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் ஐடி நிறுவனங்களில் உயர் நிறுவனர்களுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

அப்போது பேசிய அமைச்சர் நாட்டில் நோய்த்தொற்று உறுதியானவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரொனா பரவியதை ஐ‌சி‌எம்‌ஆர் தெரிவித்ததை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து ஐடி துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை பின்பு மீட்டு எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியவர் மக்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் முக்கியம் என்பதால் அவர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply