வீரசிகாமணி மலையில் வரலாற்றுத் தடயம்; கண்டுபிடிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட சமணர் படுக்கைகள்
தென்காசி மாவட்டம் வீரசிகாமணி கைலாசநாதர் மலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வின்போது, 15-க்கும் மேற்பட்ட பழங்கால சமணர் படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதியில் நடைபெற்ற இந்தத் தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள இவை, அக்காலத்தில் சமணர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கி வாழ்ந்ததற்கான முக்கியமான வரலாற்றுத் தடயங்களாகக் கருதப்படுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு வீரசிகாமணி பகுதியின் தொன்மையையும், தென்காசி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பையும் வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




