டெல்லியில் ஊரடங்கை மீறும் மக்களால் போக்குவரத்து நெரிசல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பு 19 ஆயிரத்து தாண்டிய நிலையில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரொனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஊரடங்கை மீறி மக்கள் அதிகளவில் வெளியே வருவதால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காய்கறி சந்தையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காய்கறி சந்தை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கூடினர்.

 

டெல்லி, உத்திரப்பிரதேசம் எல்லையான காசியாபாத் பகுதியிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கொரொனா பாதிப்பு அதிகம் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நவிமும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன, இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அந்த ஊழியர் நாடாளுமன்றத்தின் பிரதான கட்டடத்தில் பணியாற்ற வில்லை என்றும் மக்களவை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையில் ஊழியர்கள் யாருக்கும் கொரொனா பாதிப்பு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஊழியர் ஒருவரின் உறவினருக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் மாளிகையில் விளக்கமளித்துள்ளது.


Leave a Reply