--- --:--:-- --

இந்தியாவில் யுபிஐ சேவை அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவு..!

8

ந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புரட்சியை ஏற்படுத்திய ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவை அறிமுகமாகி வெற்றி கரமாக 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்து வந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டு சாதனை படைத்துள்ளது.

 

 

கடந்த 2016-17 நிதியாண்டில் வெறும் 1.8 கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025-26 நிதியாண்டில் 24,162 கோடியாக உயர்ந்து சுமார் 13,000 மடங்கு அபார வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல், 2016-17 நிதியாண்டில் யுபிஐ மூலம் ரூ.7,000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யப்பட்டிருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் அதன் மதிப்பு ரூ.314 லட்சம் கோடியாக அதிகரித்து இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon