குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த நெல்லையை சேர்ந்த கூலி தொழிலாளி உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பட்ட சிக்கல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த நெல்லையை சேர்ந்த கூலி தொழிலாளியின் உடல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தில் கூலிவேலை செய்து வந்த சுப்புராஜ் என்பவர் கடந்த 13 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

தனது கணவரின் உடலை கடைசியாக ஒருமுறை கூட பார்க்க முடியாமல் தடுத்து விட்டது என சுப்புராஜின் மனைவி கண்ணீரோடு நெல்லை மாவட்ட ஆட்சியரின் உதவியை நாடினார். நெல்லையில் இருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரத்தில் இருந்து உடலைக் கொண்டு வருவதற்கான முழு செலவையும் மாவட்ட நிர்வாகமே ஏற்றது .

 

சூரத்தில் இருந்து கொண்டு வந்த சுப்புராஜின் உடலை அவரது குடும்பத்தினர் பார்த்த பிறகு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. ஊரடங்கு நேரத்திலும் ஆதரவற்ற ஏழை பெண்ணின் கோரிக்கையை ஏற்று கூலித் தொழிலாளியின் உடலை சொந்த ஊர் எடுத்துவர நெல்லை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருந்தார்.


Leave a Reply