--- --:--:-- --

நண்பனுக்காக சூட் கேசில் நுழைந்த நண்பன்…மாட்டிக்கொண்ட இளைஞர்!

13

கர்நாடக மாநிலம் மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நண்பனை அழைத்து வர நூதன முறையை கையாண்டிருக்கிறார் கல்லூரி மாணவன் ஒருவன். சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருக்கும் அந்த மாணவன் தனியாக இருக்க பயந்து நண்பனை அழைத்து வர திட்டமிட்டார். ஆனால் குடியிருப்போர் சங்கத்தினர் இதை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பெரிய சூட்கேசில் தனது நண்பனை அழைத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

சூட்கேசை கண்ட குடியிருப்புவாசிகள் அதை திறக்க சொல்லி வற்புறுத்தினார். முதலில் மறுத்து அந்த மாணவன் வேறு வழியின்றி சூட்கேசை திறந்து காட்ட அதில் பதுங்கியிருந்த நண்பன் வெளியே வந்தான். தகவலறிந்த கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon