சீனாவில் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பலருக்கு மீண்டும் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜங்சன் பகுதியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 172 நோயாளிகளில் 15 சதவீதம் பேருக்கு மீண்டும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

இதனால் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருப்போர் வலியுறுத்துகின்றனர். தென்கொரியாவில் குணமடைந்த 91 நோயாளிகளுக்கு மீண்டும் பரிசோதனை என்பது பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நோயாளி குணம் அடைந்து விட்டார் என்பதை உறுதி செய்யும் ஆர்சி பரிசோதனை உள்ள குறைபாடு காரணம் எனக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்கு தொற்று இருக்கும் போது இந்த சோதனை பலன் அளிப்பதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


Leave a Reply