அமெரிக்காவில் தோண்டப்படும் நீண்ட குழி…சவபெட்டியுடன் புதைக்கப்படும் உடல்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரொனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆள் நடமாட்டமே இல்லாத ஹார்க் தீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மனிதர்கள் வாசம் செய்யாத வனப்பகுதி. இங்கு ஏராளமான எரிமலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரான்ஸ் நகரில் இருந்து கப்பல் அல்லது படகு மூலமே இந்த தீவிற்கு வரமுடியும்.

 

நியூயார்க் மாகணத்திற்கு சொந்தமான இந்த தீவில் 19ஆம் நூற்றாண்டில் இருந்து அடையாளம் தெரியாத அல்லது யாரும் உரிமை கோராத அனாதை சடலங்களை புதைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. நியூயார்க்கில் கொரொனா வைரஸ் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் கல்லறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹார்க் தீவில் குறைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக நியூயார்க் மாகாண மேயர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்காக பிரமாண்ட குழிகள் தோண்டப்படுகின்றன. ஒப்பந்த தொழிலாளர்களின் உதவியுடன் இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

நாளொன்றுக்கு சுமார் 25 உடல்கள் ஹார்க் தீவில் புதைக்கப்பட்டதாகவும் வாரத்தில் ஐந்து நாட்களும் இந்த பணிகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு சவப் பெட்டிக்குள் வைக்கப் படுகின்றன. அதன்பின் சவப்பெட்டியின் மேற்புறம் உயிரிழந்தவரின் பெயரில் இயந்திரத்தின் உதவியுடன் புதைக்கப்படுகின்றன.

 

1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளு கோரத்தாண்டவம் ஆடிய போது உயிரிழந்தவர்களின் உடல்கள் இது போன்று புதைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. தற்போது மற்றொரு பெரும் தோற்றால் வரலாறு திரும்பியுள்ளது.


Leave a Reply