கொரொனாவால் இந்தியா 3ஆவது நிலைக்கு செல்லவில்லை என தகவல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவின் சமூக பரவல் என்ற நிலையை கொரொனா தொற்று எட்டவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரொனா பரவல் மூன்றாவது நிலையை எட்டவில்லை என்ற போதும் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

 

தற்போது நாட்டிற்கு ஒரு கோடி ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரை தேவை என்ற நிலையில், 3 கோடியே 28 மாத்திரைகள் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தியாவில் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,761 ஆக அதிகரித்துள்ளது.

 

உயிரிழப்பு 206 ஆக உயர்ந்துள்ள நிலையில் 516 பேர் கொரொனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்து 364 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply