கொரொனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட முதியவர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அரியலூரில் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் கொரொனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா உணர்வு உருவெடுக்கும் அச்சமே பலரை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

 

அந்த உணர்வு அளவு கடந்தால் மன வேதனையை உண்டாக்கினால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் விதமாக நடந்துள்ளது ஒரு சம்பவம். அரியலூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்த முதியவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். அங்கு கொரொனா பாதிப்பு அதிகமாகவே அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து கடந்த ஆறாம் தேதி அரியலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மறுதினமே அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொரொனாவுக்கான வார்டில் தனியறையில் இருந்த அவர் குழுமத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது . இது அவரது உறவினர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை போன்று உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுவது மிகவும் அவசியம் என்பதையே முதியவரின் தற்கொலை உணர்த்துவதாக கருதப்படுகிறது.

 

காரணம் அவரை கொன்றது கொரொனா அல்ல, அச்சம்.


Leave a Reply