முதன்முறையாக இந்தியாவில் கொரொனாவுக்கு மருத்துவர் பலி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரொனா வைரஸ் தாக்கி மருத்துவர் ஒருவரே முதன்முறையாக உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 62 வயதான மருத்துவர் ஒருவர் கொரொனா தாக்கி இறந்துள்ளார். இவருக்கு கொரொனா தொற்று இருப்பது நான்கு நாட்களுக்கு முன் உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் மரணம் அடைந்தார் .இந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை தரவில்லை என்று சக மருத்துவர்கள் கூறுகின்றனர். குடிசைப்பகுதி மக்களுக்கு இவர் இலவசமாக சிகிச்சை அளித்து வந்ததாகவும் சக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது.

 

166 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், 473 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரசின் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

117 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், 21 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகி உள்ளனர். தலைநகர் டெல்லியில் 669 பேரும், தெலுங்கானாவில் 427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கேரளாவில் கொரொனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 545 ஆக உள்ளது. இங்கு அதிகபட்சமாக 83 பேர் குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274 இருந்து 5,734 ஆகவும், உயிரிழப்பு 149 இலிருந்து 166 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கொரொனா நோய் தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 411 இலிருந்து 473 ஆக உயர்ந்துள்ளது.


Leave a Reply