மருத்துவர்களுடன் நோயாளிகள் ஆட்டம் போட்டு உற்சாகம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இங்கிலாந்தில் கொரொனா தொற்று காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் பாட்டு பாடி நடனமாடி பொழுதை போக்கி வருகின்றனர். நேர்வே டைப் வேலி என்ற இடத்தில் பிரின்ட் சார்லஸ் மருத்துவமனையில் ஏராளமான கொரொனா தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தினம் தினம் இங்கு தொற்று இருப்பவர்கள் வந்த வண்ணம் இருப்பதால் இங்கு பணியாற்றி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தன. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அனைவரும் பாட்டு பாடி நடனம் ஆடினார்.

 

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு தங்களது மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டனர்.


Leave a Reply