தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா..! கண்காணிப்பு வளையத்தில் 34 மாவட்டங்கள்..! பீலா ராஜேஷ் தகவல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 738 ஆக உயர்ந்துள்ளதாகவும், 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

தமிழக கொரோனா நிலவரம் தொடர்பாக பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 48 பேரில் 42 பேர் ஒரே இடத்திற்கு சென்று வந்தவர்கள். மற்றவர்களில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என்று கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தற்போது 60 ஆயிரத்து 639 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 25 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 5 பேரைத் தவிர மற்ற அனைவரின் உடல் நலம் சீராக உள்ளது.

 

தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்
கொரோனா தொற்று 3-ம் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என அரசு முனைப்பாக உள்ளது.
தற்போது போதிய முகக்கவசங்களும்,பரிசோதனை கருவிகளும் இருப்பல் உள்ளன. அனைவரும் வீட்டிலேயே இருங்கள். உடல் நிலையில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.


Leave a Reply