--- --:--:-- --

ஊரடங்கால் 500 கிமீ நடந்தே வந்த மாணவன் உயிரிழப்பு!

5

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழகத்தை நோக்கி 500 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது பாலசுப்பிரமணிய லோகேஷ் என்ற 23 வயது மாணவர் நாக்பூர் அருகே உள்ள உணவு பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உண்ண உணவு கூட கிடைக்காமல் தவித்த அவர் தமது 29 சகாக்களுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டார். ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள தமது ஊருக்கு நடந்தே செல்ல லோகேஷ் முடிவெடுத்தார். 9 நாட்களாக நடந்து வந்த அவர்கள் வழியில் கிடைத்த லாரி போன்ற வாகனங்களில் சிறிது தூரம் கடந்து வந்தனர்.

 

ஆனால் ஹைதராபாத் கடந்து செகந்திராபாத் வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது லோகேஷிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon